Skip to content

Category Archives: அமேரிக்கா

அமேரிக்கத் தமிழ் மருத்துவர்கள்

04-Sep-10

:நன்றி:

Technorati Tags: அமெரிக்கா, அமேரிக்கா, மாநாடு

ஜோடி வெங்கடேசன்

29-Aug-10

’ஜோடி வெங்கடேசன்’ என்றவுடன் ஏதோவொரு தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது புது திரைப்படத் தலைப்பு என நினைத்துவிட வேண்டாம். உயிரே போகிற விதயமானாலும் — ஒன்றுக்கும் உதவாத விதயமானாலும் சரி, எடுத்ததெற்கெல்லாம் சினிமாவை ஒப்பிடும் பெருமை வாய்ந்தது தற்போதைய தமிழ்க் குமுகாயம் . எச்சரிக்கையாக ஒரு விளக்கக் குறிப்பு. Jody என்பது அமேரிக்காவில் ஓரளவு பரவலாய் உள்ள ஆண்பால் பெயர். Jodi(e) பெண்பால் பெயர். மற்றும் இப்பதிவின் நாயகர் பெயர் ஜோடி வெங்கடேசன்.
ஜோடியின் தந்தை ஷேன் [...]

?..சுதந்திரநாள்..?

14-Aug-10

நினைவு தெரிந்து வாழ்ந்த பதினைந்து ஆண்டு கால இந்திய(யா) வாழ்வில், சுதந்திரநாள் பெரிதாக கொண்டாடப்பட்டதாக ஞாபகம் இல்லை. இலவச மிட்டாய்களுடன் கூடிய பள்ளி இல்லாத மகிழ்ச்சி சிறார்களுக்கு. ஊரில் சில முக்கூட்டுகளில் கொடியேற்றம், புளித்துப் போன அரசியல்வாதி பேச்சுகள்; விதிவிலக்காக ஓரிரு தியாகிகளுக்கு நன்றி செலுத்தல்.
ஓகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாளில்:
அமேரிக்காவில் தெற்காசிய மக்கட்தொகை கணிசமாக உள்ள பெருநகரங்களில், “இந்திய சுதந்திர நாள்” இந்திய மொழி வாரி சங்கங்களால் கொண்டாடப்படவுள்ளது. பல வருடங்களாக நிகழ்ந்து [...]

மேரத்தான்_பெண்மணி_

10-Oct-09

பாஸ்தாவும், புரித்தோக்களும், சேலட் ம் பழகிப் போய் பல காலமாகிவிட்டாலும், ஒரு வாய் மோர் சாதத்திற்கு வாய் ஏங்குதலுக்கு அடுத்ததாகச் சொல்லலாம், தமிழில் படித்தலும், எதையாவது கிறுக்குதலும். திணறும் பொருளாதாரத்தில், விழி பிதுங்கும் அமேரிக்க சிறு நிறுவனங்களின் உரிமையாளர்களில் ஒருவனான இப்பதிவனுக்கு, புலிவால் பிடித்த நாயராக தினமும் அல்லற் படுவதிலிருந்து சிறிது இளைப்பாற, தமிழில் எழுதத் தோன்றியது. தமிழில் எழுதி உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களின் அழகைக் கண்டு களித்தால் போதுமெனத் தோன்றினாலும், உருப்படியாக ஏதாவது எழுத [...]

ஜுலை 4

04-Jul-09

இங்கிலாந்திடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட நாளை, சுதந்திர தினமாக ஜுலை 4 ஆகிய இன்று அமேரிக்காவில் கொண்டாடுகிறோம்.
இங்கு தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும், நீரில் கலக்கவியலாத எண்ணைச் சொட்டுகளாகவும் வசித்து வரும் மக்கள் அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள்.
அமேரிக்க தேசிய கீத ஒலியொளி காணொளியொன்று — பாடியவர் என்றும் நினைவில் வாழும் மார்வின் (இக்)கே.

Technorati Tags: 4th of july, Independence day, USA