கடும் உழைப்பால் மட்டுமே தொழிலில் முன்வந்தவர். யார் உதவியும் கிடையாது. புலம் பெயர்ந்து, மத்திய 1980 களில் கேலப், (நியு மெக்ஸிக்கோ) எனும் சிறு அமேரிக்க நகரத்தில் இருபது அறைகளுடன் கூடிய ஒரு பழைய தங்குவிடுதியை, (Motel) விலை கொடுத்து வாங்கினார். பல நாட்கள் இரவு பகலென நேரம் செலவழித்து, தரம் இழந்திருந்த தங்குவிடுதியை AAA வின் 1 வைரம் சான்றிதழ் பெற வைத்தார். பின், உழைப்பின் பலனாக பக்கத்து டெக்ஸஸ் மாநிலத்தின் டெம்பிள் நகரத்தில், [...]
பதின்ம வயதுகளில் அடியெடுத்து வைக்கவிருக்கும் மகனுக்கு, இந்த வருடம் ஹாலோவினுக்காக சிறப்பு உடை தரிக்கலாமா வேண்டாமா என்றொரு குழப்பம். இதுமட்டுல்லாமல் எதைத் தேர்ந்தெடுக்கிறது என்றொரு தெரிவுகள் குறைவான நிலை. நல்ல வேளை ஞாபகத்திற்கு வந்தார்கள் The Blues Brothers ! அப்பாவுக்கும் பிள்ளைக்கும் மிகவும் பிடித்த திரைப்படம். சகோதரர்களில் ஒருவரான Jake Blues வேடம் தரித்து இந்த வருடம் மிட்டாய் உலா சென்று வரலாம் என்றிருக்கிறார் எனது மகன்.
கூடவே துணைக்கு நான் போக வேண்டும். [...]
சற்றுமுன் ஜூன் 24 – 2007 ஆகிய இன்று, உள்ளூர் நேரம் மாலை 7.00 மணி அளவில் நான் அமேரிக்காவிற்கு புலம் பெயர்ந்து 25 ஆண்டுகளாகிவிட்டன. இந்நிகழ்வின் சிறப்பையறியாத அல்புகர்க்கி நகர தந்தையிடமிருந்தோ, நியு மெக்சிக்கொ மாநில ஆளுநரிடமிருந்தோ வாழ்த்துகளோ, நன்றி அறிவிக்கும் மடல்களோ இதுவரை ஏதும் வரவில்லை.
ஆயினும் இவர்களை போலன்றி எனது நன்றிக்கடனை ஓரளவு தீர்க்க விரும்புகிறேன்.
கடந்துவிட்ட இக்கால் நூற்றாண்டு காலகட்டத்தில், கடந்த 10 வருடங்களில் தமிழ் சார்ந்த இணையம் என [...]
காலம் போகிற போக்கைப் பார்த்தால், சில நூற்றாண்டுகளில் தந்தையைக் குறிக்கும் “அப்பா,நைனா,வாப்பா,dad,pops ” போன்ற வார்த்தைகளுக்கும் அவை சுட்டும் அஃறிணைகளுக்கும் (!?) அர்த்தம் இல்லாமல் போய்விட வாய்ப்புகள் வெகுவாக உள்ளன. கூடிவாழும் இரு பெண்கள் செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். அண்மைய உதாரணம், அமேரிக்க துணை அதிபர் டிக் சேனியின் மகள். சேர்ந்து வாழும் ஓரின ஆண்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்கிறார்கள் சிலர். ‘நாகரீக உலகம்’ நாகரீகத்தின் உச்சக்கட்டத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், [...]
இந்தியாவில் வசிக்கும் எனது ஆறு தாய்மாமன்களில், ஒருவர் இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது தமிழகத்தின் மயிலாடுதுறை, சீர்காழி நகரங்களில் அடுக்கங்கள் மற்றும் வீடுகள் கட்டும் தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் நிறுவனம் குறித்த ஒரு விளம்பரம், தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு முன்னோடியான செயலாக, முதன்முறையாக, விளம்பரமாக இப்பதிவில் வெளியிடப்படுகிறது
விளம்பர பதாகையில் ‘லி’ என்ற எழுத்து காணாமல் போயுள்ளது. குவாலிட்டி என்பது குவாட்-டி என காணப்படும்.