பதிய, பதிய காசு

Mar 6th, 2006 | By வாசன் | Category: பொது

புளாக் ங்கற வலைப்பதிவை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பார்க்காறங்க. சிலருக்கு கணினியே கதியேன்னு இருந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடறது புடிச்சிருக்கு… சிலருக்கு பதிவுகள் வழியா நிழல் சண்டைகள் போடறது சோறு சாப்படற மாதிரி.. ஒரு சிலருக்கு அவர்கள் எழுதறத பார்த்தால், பதிவுகள் இல்லாமல் ஒன்றுமே இல்லாதது போல அவர்களுக்கு என்பதாக உணர முடிகிறது, … ஒரு சிலருக்கு 92ல் Ross Perot அமேரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட்ட போது, துணை அதிபர் பதவிக்கு கூடவே போட்டியிட்ட James Stockdale சொன்ன மாதிரி Why am I here, what am I doing here. இது என் மாதிரி ஆட்களுக்கு…

எல்லோரையும் தூக்கி சாப்படற மாதிரி ஒரு ஆள். பெயர்
ஜொன் (இ)ஸ்காட்.
ரொம்பவே பதிவு பைத்தியம் முற்றிப் போன ஆளாய் தெரியுது. ஸ்காட் என்ன அறிவிச்சிருக்கார்னா, ” யாருக்குமே தெரியாத நிறைய அனாமத்து பதிவுகள அறிமுகம் செய்யற ஆசாமிகளுக்கு 10,000.00 அமேரிக்க வெள்ளி பரிசளிக்க போறதா..” முதல் பரிசு 3000.00 வெள்ளி மற்றது தலா தலைக்கு 100.00 வெள்ளி என.. டெக்னோரேடி இந்த ‘டெக்னோரேடி தலை 100 பதிவுகள்’ செய்யறது அவருக்கு புடிக்கலை போலிருக்கு.. அதனால இப்படி அறிவிச்சிருக்கார்… ஆறு மாதம் கழித்து பரிசுகள் பகிர்ந்தளிக்கப்படுமாம்…

ஆங்கிலத்திலும் பதிவு செய்யறவங்க உடனே கவனிக்க வேண்டிய சமாச்சாரம் இது.. ஆர்வமும், கையில் அளவற்ற நேரமும் உள்ள தமிழர்கள் உடன் பாய்ந்து செயலாற்றி இணையத்திலிருந்து காசு பண்ண நல்லவொரு தருணம்..

மேலதிக தகவல்களுக்கு

$$$$$$

ஒரு பின்னூட்டம்
Leave a comment »

  1. [...] த்தருக்கு முத்திப் போகும்? வாசன் வழியாக 1 Comment » இன்னொரு சந [...]

கருத்தளிக்க..