சறுக்கும் வழுக்குப் பாறை பொருளாதாரம், பட்டறிவு மிகவும் குறைந்த புது அதிபர், ஏறிக் கொண்டே போகும் வேலையில்லாதோர் எண்ணிக்கை விழுக்காடு என எமது நாடு அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் வேளைகளில், வேலைகள் தேடும் வேலை நிரந்தரமாய் ஆகிவிட்ட சூழலில், நல்லிசை மட்டும்தான் இதம், மென் ஒத்தடம், எல்லாம்.
வருடும் இசை இல்லாமல் உறக்கம் வருவதில்லை. கேட்காத இசைகளை இணையத்தில் தேடி அலையும் போது அற்புதமான இசைகள் ஒளியாகவும், ஒலியாகவும் தாலாட்டி, இளைப்பாற்றலையும் தருகின்றன.
கிடார் இசைக்கு அடிமையாகாதோரும் உண்டோ…? அண்மையில் கேட்ட ஒரு பாட்டின் ஒளித்துண்டு. வழியாக பன்னீர் தூவுதல் செய்பவர் ஜெஃப் பெக்.
இதமான இந்த இசை நான் அடிக்கடி கேட்கும் இளையராஜாவின்
ராஜபார்வையான பின்னணி இசை போன்றது.



ஒரு பின்னூட்டம்
உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்
கேள்வி. நெட்
பின்னூட்டமிட