கடும் உழைப்பால் மட்டுமே தொழிலில் முன்வந்தவர். யார் உதவியும் கிடையாது. புலம் பெயர்ந்து, மத்திய 1980 களில் கேலப், (நியு மெக்ஸிக்கோ) எனும் சிறு அமேரிக்க நகரத்தில் இருபது அறைகளுடன் கூடிய ஒரு பழைய தங்குவிடுதியை, (Motel) விலை கொடுத்து வாங்கினார். பல நாட்கள் இரவு பகலென நேரம் செலவழித்து, தரம் இழந்திருந்த தங்குவிடுதியை AAA வின் 1 வைரம் சான்றிதழ் பெற வைத்தார். பின், உழைப்பின் பலனாக பக்கத்து டெக்ஸஸ் மாநிலத்தின் டெம்பிள் நகரத்தில், முன்பு இருந்ததைவிட பெரியதொரு தங்குவிடுதியை வாங்கினார்.
திறம்பட இவ்விடுதியை நடத்தி வருவதாலும், தன்னிடம் பணிபுரிபவர்களை ஒழுங்காக நடத்துவதாலும், தற்போது, டெக்ஸஸ் மாநிலத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரில் புதியதொரு தங்குவிடுதியை இவரால், தானே பொது ஒப்பந்தகாரராகவும் இருந்து கட்டித் திறக்க முடிந்திருக்கிறது. நேற்று 05.29.09 அன்று திறக்கப்பட்டுள்ளது, The Comfort Suites hotel – downtown Austin.
விடுதியின் உரிமையாளர் ஒரு தமிழர்

என்னுடைய இளவல். பெயர், நிரஞ்சன் பிள்ளை.
டெக்ஸஸ் மாநிலத்தில் மற்றும் அமேரிக்காவில் வாழும் பதிவர்கள் அவர்களுடைய நண்பர்கள் ஆஸ்டின் நகரத்தில் தங்குவதற்கு வசதிகளுடன் கூடிய நடுத்தர தங்குவிடுதி தேவைப்படின், இது நல்லதொரு இடம். மத்திய விரைவு நெடுஞ்சாலை 35 அருகிலுள்ளது. இப்பதிவரின் நண்பர் என்பது தெரிவிக்கப்பட்டால் கூடுதல் தள்ளுபடிகளுண்டு.
நன்றி! வணக்கம்!



16 பின்னூட்டங்கள்
இச் செய்தியை படிக்க பெருமையாக இருக்கிறது. தமிழினத்தில் இது போல் மேலும் பலர் பொருளாதாரத்தில் சாதிக்கவேண்டும். வாழ்த்துக்கள்.
நண். வாசன்,
உங்கள் இளவல் நிரஞ்சனுக்கு வாழ்த்துக்கள்!
சென்ற வாரம் தான் ஊரிலிருந்து மைத்துனர் குடும்பம் ஹ்யூஸ்டன் வர சேன் ஆண்டானியோ ரிவர் வால்க் ப்லாசாவில் தங்கினோம்.
இனி ஆஸ்டின் கம்பர்ட் விடுதியில் ஒரு நாள் தங்குவோம்.
அன்புடன்,
நா. கணேசன் குடும்பத்தினர்
மிக்க நன்றி முகுந்த். ஆம்! தமிழர்கள் தொழில் துறையில் மேலும் ஈடுபட வேண்டும்; 8 மணி நேரம் பிறருக்கு வேலை செய்வது தவறு என்றில்லை. நாம் பொருளாதாரத்தில் நிலையான ஒரு வலிவு பெற வழி வகுக்கும் வகையில் பல்துறைகளில் கால் பதிக்க வேண்டும். ‘உலகம்’ ஒரு மரியாதையுடன் நம்மை கவனிக்க உதவும்.
வாழ்த்துகளுக்கு உளமார்ந்த நன்றிகள் நா.கணேசன். உங்களுடைய கனிவான சொற்களை தம்பியிடம் படிக்கச் சொல்வேன்.
சேன் அண்டோனியோ ரிவர் (உ)வாக் என்றவுடன் ஒரு ஞாபகம்/தம்பட்டம்!
அலமோ நினைவு சின்னத்தை நாங்களும் எடுத்த படம் இங்கே http://tinyurl.com/vishmom
போடப்பட்டுள்ளது!!
அன்பினிய வாசன்
பெருமையாகவும் நிறைவாகவும் இருக்கிறது
உங்கள் இளவல் எனும்போது மகிழ்ச்சியின் அளவும் அதிகரிக்கிறது. என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் இளவலுக்கும்
நட்புடன்
ஆசிப் மீரான்
anbu Vasan,
I am so happy that your brother has succeeded so well.
wish him more success in life. thank you for this post.
No w I will make it a point to come and stay there with the family.
ofcourse I shall definetely mention your name:)))
வாசன் – வாழ்த்துகளைத் தெரிவியுங்கள். தொழில்முனைவோரைப் பாராட்டுவதும் ஊக்குவிப்பதும் மிக முக்கியமானது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தனிநபர் மற்றும் சிறுதொழில்களை வரிச்சலுகைகள், வரி ஒத்திவைப்பு போன்ற முறைகளில் பெரிதும் ஊக்குவிக்கிறார்கள். சம்பள வேலைகளுக்கு இந்தச் சலுகைகள் கிடையாது. காரணம் தொழில்முனைவோர் சுயவேலைவாய்ப்பைத் தேடிக்கொள்வது மட்டுமின்றி பிறருக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். நம்மவர்கள் இன்னும் காலணியாதிக்க மனோநிலையில் இன்னொருவருக்கு சேவகம் செய்யும் மனநிலையைவிட்டு வெளியே வரவேண்டும் என்பது என் ஆசை. கூடவே நம்மவர்கள் தொழில்முனைவு வெற்றிகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதும் அவசியம்.
ஒரு முறை அரிஸோனா மாநிலம் சென்று வந்த படங்களைப் பார்த்தபின் குளிர் பிரதேசத்தில் இருக்கும் என் குடும்பத்திற்கு அரிஸோனா,நியூ மெக்ஸிகோ, டெக்ஸஸ் செல்ல பேராவல் இருக்கிறது. இந்தப் பனிக்காலத்திலாவது முடியுமா என்று பார்க்க வேண்டும்.
நான் டாலஸ்லதான் இருக்கேன், டெம்பிளோ , ஆஸ்டினோ போகும் போது இனி அங்கியே தங்குறேன் நண்பரே.
மிக்க மகிழ்வளிக்கும் செய்தி!
தங்கு விடுதியின் வலைத்தள முகவரியையும் கொடுத்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.
அன்பின் ஆசிப், வெங்கட், ரேவதி நரசிம்ஹன், குடுகுடுப்பை & வெயிலான்
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
ஆசிப்: உங்களது அன்புக்கு என்றும் நன்றி.
ரேவதி: அந்த பக்கம் போனால் நிச்சயம் சந்தித்துப் பேசுங்கள்.
குடுகுடுப்பை & வெயிலான்: நீங்கள் தரவிருக்கும் விடுதி வரவுகளுக்கு நன்றி. http://tinyurl.com/new-motel-austin
வெங்கட் நீங்கள் சொல்லியுள்ளதை மனதில் வைத்தே இதுபற்றி எழுதினேன். பொதுவாக தமிழரிடையே நிலவும் வரையறைகளை மீறி தொழில் ஈடுபட்டு வெற்றி அடைபவர்களும் உள்ளார்கள் என்பதை காண்பிக்க. இது போன்று இங்கே வட அமேரிக்காவில்
ஒரு வகையில் முன்னோடி என சொல்லகூடியவர்கள் பற்றி மேலும் தெரிந்துகொண்டு எழுத ஆவலுண்டு. எடுத்துக்காட்டாக, “திரு.ராம் துக்காராம்”. வல்லத்துக்காரர். உங்களுக்கு அவரை 2001 ல் ஃபோஸ்டர் நகரம்-கலபோர்ன்யா தமிழ் இணைய மாநாட்டில் சந்தித்தது
ஞாபகம் இருக்கலாம். ஃபோர்ட், ஜீ எம் ஸி நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் செய்யும் நிறுவனத்தின் தலைவராய் இருந்தவர்.
எனது அப்பாவின் இளவல்களில் ஒருவர். 60 களில் கேனடா பின் யூ எஸ் என வந்து – 2 முதுநிலை பொறியற் பட்டங்களை வாங்கியவர், பின் அரசுத் தொழிலை விட்டு, அமேரிக்க இந்திய வெள்ளி நகை (native american indian jewelry) மொத்த வியாபாரம் பின் தங்குவிடுதி தொழிலில் ஈடுபட்டவர். தற்போது பல விடுதிகளுக்கு உரிமையாளர். இது போல பலரும் உள்ளனர்.
உங்களது புது LED விளக்கு கம்பங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்வேன்.
வாழ்த்துக்கள் வாசனுக்கும், இளவலுக்கும்!
வரும்போது அங்குதான் தங்கப்போகிறேன்!
என் வாழ்த்துக்களை சொல்லுங்கள். என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன்.என் சகோதரி பணி நிமித்தம் அடிக்கடி ஆஸ்ட்டின் போவதால், அங்கே தங்க வாய்ப்பு உண்டு. (நிரஞ்சன் என்பது அவள் மகனின் பெயர் கூட:))
I really appreciate all of your compliments and support. If you all ever come this way, please call me; [(512) 251-9088] I will make special arrangements to stay at my hotel.
Thank you very much,
Sincerely,
Gene (Niranjan) Pillai
அடுத்தமுறை ஆஸ்சிட்டின் செல்லும்போது அவசியம் இந்த விடுதியில் தங்குவோம். வாழ்க ! வளர்க !!!
very happy to see, all the best from kodai F2F
Dear Vasan/Niranjan,
I am extremely very happy to hear this news.
Also read about your helping nature in USA by reading seemachu’s blogspot, (Mayavaram)
Do you have any websites…. My e mail id is …. harikrishnan_63_**_**.com
Best Regards
Harikrishnan.P
Indian Navy(Retd) Sirkali
Congratulations Vassan/Niranjan. I will inform about this new motel to my brother Senthil Kumar, My brother-in-law Suresh & family , my cousin kumabals and other friends there…..!. All the best. I am really proud of you.
Muthu Kumar – Singapore
பின்னூட்டமிட