மேரத்தான்_பெண்மணி_
Oct 10th, 2009 | By வாசன் | Category: அமேரிக்கா, தமிழர்பாஸ்தாவும், புரித்தோக்களும், சேலட் ம் பழகிப் போய் பல காலமாகிவிட்டாலும், ஒரு வாய் மோர் சாதத்திற்கு வாய் ஏங்குதலுக்கு அடுத்ததாகச் சொல்லலாம், தமிழில் படித்தலும், எதையாவது கிறுக்குதலும். திணறும் பொருளாதாரத்தில், விழி பிதுங்கும் அமேரிக்க சிறு நிறுவனங்களின் உரிமையாளர்களில் ஒருவனான இப்பதிவனுக்கு, புலிவால் பிடித்த நாயராக தினமும் அல்லற் படுவதிலிருந்து சிறிது இளைப்பாற, தமிழில் எழுதத் தோன்றியது. தமிழில் எழுதி உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களின் அழகைக் கண்டு களித்தால் போதுமெனத் தோன்றினாலும், உருப்படியாக ஏதாவது எழுத வேண்டுமே..
ப்ளாக்ஸ்வரா இணைய இசைக்குழுவில் பல பாடல்கள் கேட்டு ரசிக்கத் தகுந்தவை. இனிய குரல் படைத்தோர் பலர். இனிய குரலை அடைய தளராது முயற்சி செய்து கொண்டுள்ளோரும் உண்டு. திறமையும், குரல்வளமும் படைத்தோர்களில் ஒருவர் மீரா மனோகர். வட கலபோர்னியாவில் வாழும் இப்பாடகி, மேரத்தான் ஓட்ட பந்தயங்களிலும் பங்கெடுப்பவர். கடந்த வருடம் அரை மேரத்தானில் ஓடியவர், அண்மையில் திரும்பவும் பங்கெடுத்து அது பற்றி இங்கு பதிவு செய்துள்ளார்.
அமேரிக்கா வாழ் தெற்காசிய மக்களில் இது போன்றோர் வெகு குறைவு. மகாகவி இருந்திருந்தால் அவன் அகம் மகிழ்ந்திருக்கும். அமேரிக்கா வாழ் தமிழர்கள் சார்பாக மீரா மனோகருக்கு நல் வாழ்த்துகள்.
இனிய குரல் படைத்த மீரா மனோகரின் இசைப்பதிவு இங்கே :ஸ்வரஸ்தானம்



